பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழா இரதம் சீர்செய்யும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2022 04:03
காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழாயொட்டி இரதம்,பல்லக்கு சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
காரைக்கால் பிரசித்தி பெற்ற விழாவான மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் 199ம் ஆண்டு கந்தூரி விழா மார்ச் 13ம் தேதி மிகவிமர்ச்சியாக துவக்குகிறது.அன்று மாலை ரதம், பல்லக்கு வீதி உலாவும்.இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. வரும் மார்ச்.22ம் தேதி இரவு 10மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதி உலா,இரவு 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படுதல்.அதிகாலை 3மணிக்கு வலியுல்லாஹ் அவர்கள் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசுதல் மார்ச்.25ம் தேதி கொடி இறக்குதல் நடக்கிறது. மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் பல்லாக்கு கடந்த 150 ஆண்டுகளுக்கு முன் புதிதாக செய்யப்பட்டது. எந்த மாவட்டத்தில் இல்லாத சிரப்பு மிகுந்த அம்சங்களுடன் இரதம், பல்லக்கு வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.கந்தூரி விழாவை முன்னிட்டு இரதம்,பல்லக்கு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.