முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி விழா தொடங்கியது: பக்தர்கள் காப்பு கட்டினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2022 12:03
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். இங்கு நடைபெறும் பால்குட திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்துவர். இன்று காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கொடியேற்றம் நிகழ்ச்சியை தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டிக் கொண்டனர். பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். வரும் மார்ச்.15 ஆம் தேதி கரகம், மது, முளைப்பாரி நிகழ்ச்சியும், மார்ச் 16 காவடி, பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி, கணக்கர் அழகுபாண்டி செய்துள்ளனர்.