அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் கோயில் வாசலில் கிடந்த நடராஜர் சிலை வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் , மேல புதுத்தெருவில் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. அந்தக் கோயில் வாசலில் பேப்பரில் சுற்றப்பட்டு தாண்டவக்கோல நடராஜர் சிலை கிடந்தது. காற்றில் பேப்பர் விலகியதால் சிலை மட்டும் தனியாக இருந்தது. சிலை சுமார் ஒரு அடி உயரம் கொண்டது. செம்பால் செய்யப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் வருவாய் துறைக்கு தகவல் அளித்தனர். வி.ஏ.ஓ., தங்கக்குமார், கிராம உதவியாளர் முத்துராமலிங்கம் சிலையை மீட்டு அம்பை தாசில்தார் வெற்றிச்செல்வியிடம் ஒப்படைத்தனர். சிலை தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.