காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் குளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. குளத்திற்கு தண்ணீர் செல்லும் வழி ஆக்கிரமிப்பால் எப்போதும் வறண்டு காணப்படுகிறது.காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கோவில் வெளியில் குளம் உள்ளது.தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த கோவில் குளம் சுற்றுச்சுவர் படிக்கற்கள் பெயர்ந்து இருந்தன. அவற்றை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான கோவில்கள் அனைத்திலும் குளங்கள் உள்ளன. அந்தந்த குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வழிகள் முறையாக அமைக்கப்பட்டன.நகர் பகுதி விரிவாக்கத்தின் போது கோவில் குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டு விட்டன. அதில், வைகுண்ட பெருமாள் கோவில் குளமும் ஒன்று. இருந்தாலும் கோவில் குளத்தில் உள்ள படிக்கட்டுகள் சில இடங்களில் பெயர்ந்து இருந்தன. அதே போல் சுற்றுச்சுவரில் விரிசல் இருந்தது. அவற்றை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.