பதிவு செய்த நாள்
16
ஜூலை
2012
10:07
தஞ்சாவூர்: தஞ்சை பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை ஏழு மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் துவங்கி நடந்தது. இதைத்தொடர்ந்து, ஒன்பது மணிக்கு நாடி சந்தானம், 10 மணிக்கு பூர்ணாஹூதி, 10.15 மணிக்கு யாத்ரா தானம், 10.30 மணிக்கு கடம் புறப்பாடு, 11 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 11.15 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம், 11.30 மணிக்கு மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கோவிந்தராஜூ, கணக்கர் பாலாஜி மற்றும் கோவில் அர்ச்சகர் பாலு, முத்துக்குமார் குருக்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.