பதிவு செய்த நாள்
09
மார்
2022
04:03
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்தநாயகி அம்மன், தனித்தனி சன்னதிகளுக்கு தலா ஒரு கொடி மரம் உள்ளது. இவ்வாறு இருப்பது விசேஷமானது. அறநிலையத்துறைக்கு உட்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசிக்கு அடுத்தபடியாக இங்குள்ள வராக நதியில் வலது, இடது, ஆண்,பெண்,மருதம் மரங்களுக்கு நடுவே குளிப்பது ஐஸ்வர்யம்.
பங்குனி உத்திர தேர்த்திருவிழா: இன்று மார்ச் 9 முதல் மார்ச் 18 வரைபத்து நாட்கள் திருவிழா நடக்கும். முக்கிய திருவிழாவான தேரோட்டம் மார்ச் 17ல் நடக்கிறது. கொடியேற்றத்தின் போது ராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்) வாகனமான ரிஷபம் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. அறம் வளர்த்தநாயகி உடனுறை ராஜேந்திர சோழீஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணியர், பிரியாவிடை அம்மன், விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது. ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கும். நகராட்சித் தலைவர் சுமிதா, திருப்பணிக்குழுவினர்கள் சசிதரன், சிதம்பர சூரிய வேலு, வர்த்தக பிரமுகர்கள் முரளி, சிவக்குமார், சவுந்திரம், திரிசங்கு, ராஜவேல் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அர்ச்சகர்கள் தினேஷ் சிவம், கார்த்திக் ஆகியோர் பூஜை செய்தனர்.