Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவில் ... பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில் பங்குனி தேர்த்திருவிழா துவங்கியது பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூவலூர் மார்க்க சகாய சுவாமி பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
மூவலூர் மார்க்க சகாய சுவாமி பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

09 மார்
2022
04:03

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மூவலூர் மங்கல சௌந்தரநாயகி சமயத்தை மார்க்க சகாய சுவாமி கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்க சகாய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுவாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனை சவுந்தர்ய நாயகி அம்பாள் திருக்கல்யாணம் புரிந்த தலமாகவும், துர்கா பரமேஸ்வரி மகிஷாசூரனை வதம் செய்த பின்னர் இங்கு எழுந்தருளியுள்ள சுவாமியை வழிபட்டு அகோர வடிவிலிருந்து சௌவுந்தர்ய வடிவு பெற்ற தலமாகவும்,  வழித்துணை நாதருக்கு இதய நோய் தீர்த்த தலமாகவும், பிப்பல மகரிஷி முக்தி அடைந்த தளமாகவும் இது விளங்கி வருகிறது. மேலும் இத்தளத்தில் எழுந்தருளியுள்ள மார்க்க சகாய சுவாமியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் வழிபட்ட தளமாகவும் இது விளங்கி வருகிறது. இக்கோவிலில் சுவாமிக்கு வில்வ அர்ச்சனை செய்து அந்த வில்வத்தை தண்ணீரில் விட்டு பருகினால் இதய நோய் தீரும் என்பது ஐதீகம் இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நேற்று யாகசாலையில் சிறப்பு பூஜைகள் ஹோமங்கள் செய்யப்பட்டது தொடர்ந்து இன்று காலை ரோகிணி நட்சத்திரத்தில் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை சாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான செய்துவைத்தனர். பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய விழாக்களாக வரும் 13 ஆம் தேதி சப்பரம், 15ஆம் தேதி திருக்கல்யாணம், 17ஆம் தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஞானசுந்தரம் தக்கார் உத்திராபதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையோட்டி கோயிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி ; சிருங்கேரியில் உள்ள தக்ஷிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்தாபகரான ஸ்ரீ ஆதி சங்கர ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள் பாவை நோன்பு ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையம்  -குப்பிச்சிபாளையம் ரோடில்டிஅமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar