பதிவு செய்த நாள்
10
மார்
2022
03:03
பெங்களூரு:ஹோலி பண்டிகையை ஒட்டி பயணியர் வசதிக்காக, ஒரு வழி, யஷ்வந்த்பூர் - கோரக்பூர் விரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என, தென் மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:ஹோலி பண்டிகையை ஒட்டி பயணியர் வசதிக்காக, ஒரு வழி, யஷ்வந்த்பூர் - கோரக்பூர் விரைவு சிறப்பு ரயில் நிற்கும் ரயில் நிலையம் அறிவிக்கப்பட்டு உள்ளது.எண்: 06597 யஷ்வந்த்பூர் - கோரக்பூர் விரைவு சிறப்பு ரயில், மார்ச் 12ல் யஷ்வந்த்பூரில் மாலை 5:20 மணிக்கு புறப்பட்டு, ஹிந்துபுர், தர்மாவரம், அனந்தபூர், குண்டகல், அதோனி.மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூர், பேகம்பேட், செகண்தராபாத், காசிபெட், ராமகுண்டம், மன்சிர்யால், பெல்லம்பள்ளி, பால்ஹர்ஷா.சந்திராபுர், நாக்பூர், அம்லா, பேடுல், கோரடொங்க்ரி, இடர்சி, ஜபல்பூர், கட்னி, சட்னா, பன்டா, கான்பூர் சென்ட்ரல், உன்னாவ்.ஆஷ்பாக், பாத்ஷா நகர், பாரபங்கி, கோன்டா, மங்காபூர், பாஸ்டி, காலிலாபாத் வழியாக கோரக்பூருக்கு மூன்றாம் நாள் இரவு 7:30 மணிக்கு சென்றடையும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.