மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் நேற்று பங்குனி 2ம் நாள் விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு பாலாபிஷேகம், மகா தீபாராதனைக்குப் பின், வெள்ளி வாகனத்தில் உற்சவர் மலைவலம் காட்சி நடந்தது.தொடர்ந்து, மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு உற்சவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் வலம் வந்தார்.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.