பதிவு செய்த நாள்
11
மார்
2022
06:03
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ரூ.18.5 லட்சம் உண்டியல் மூலம் வசூலாகி உள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழா கடந்த 27ம் தேதி துவங்கி மார்ச் 8 வரை நடந்தது. விழாவையொட்டி பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிப். 3ம் தேதி முதல் நேற்று வரை வைக்கப்பட்டிருந்த 9 நிரந்தர உண்டியல், 7 குடங்கள் மற்றும் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வைக்கப்பட்டிருந்த திறந்த வார்ப்பு ஆகியன நேற்று திறந்து எண்ணப்பட்டன. மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், பத்மநாபபுரம் தேவசம்தொகுதி கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர்கள் கோபாலன், செல்வி, கோயில் ஸ்ரீகாரியம் ஆறுமுகநயினார் மற்றும் கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், ரூ.18,49,903 ரொக்கமாகவும், 22.400 கிராம் தங்கம், 72.400 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் வசூலாகி இருந்தது. இதன் மூலம் திருவிழா கால உண்டியல் வருவாயாக மொத்தம் ரூ.41,63,226 பணமாகவும், 72.600 தங்கம் மற்றும் 186 கிராம் வெள்ளி கிடைக்கப்பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ. 5 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.