பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2022 06:03
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவையொட்டி மார்ச் 10 ம் தேதி இரவு பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்தனர். பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, இரவு 10:00 மணிக்கு காப்பு கட்டப்பட்டது. 10 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. மார்ச் 18 ல் பால்குட விழாவும், கிடா வெட்டி பொங்கல் வழிபாடும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கண்ணமங்கலப்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.