காரைக்குடியில், பால்குடம், அக்னிச்சட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2022 02:03
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, காவடி, எடுத்தும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழா மார்ச் 8 ஆம் கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காப்பு கட்டும் நிகழ்ச்சியை தொடர்ந்து, முத்தாலம்மன் கோயிலில் இருந்து மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு தினமும் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். மார்ச்.15 ஆம் தேதி கரகம், மது, முளைப்பாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 16 ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான காவடி, பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.