பதிவு செய்த நாள்
17
ஜூலை
2012
11:07
நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆடி மாதப் பிறப்பையொட்டி நடத்தப்படும், ஆனி வார ஆஸ்தான வைபவம் நேற்று நடந்தது.இதையொட்டி, கோவிலில் மூலவரான வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை, 5 மணிக்குப் பின், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி, புஷ்ப பல்லக்கு சேவையில், திருமலை மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று கோவிலில், சுப்ரபாத சேவை தவிர மற்ற ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
பைக் காணிக்கை: மகேந்திரா நிறுவனம், புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள, "125 சி.சி., ரோடியோ ஆர்.2 என்ற இருசக்கர வாகனம் ஒன்றை, திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளது. திருப்பதியில் உள்ள மகேந்திரா விற்பனையாளர், துர்கா ஆட்டோ மொபைல் சார்பில், இந்த வண்டிக்கான ஆவணம் மற்றும் சாவியை, மேலாளர் வெங்கடேஷ், தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்ரமணியத்திடம் நேற்று முன்தினம் வழங்கினார்.