காஞ்சிபுரம் : ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சத்தில் உருவாக்கப்பட்ட சிவலிங்கம், நேற்று காஞ்சிபுரம் வந்தது. மண்ணிவாக்கத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண யோக பீடம் சார்பில், இமயமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட, ஒரு லட்சத்து 8 பஞ்சமுக ருத்ராட்சத்தை கொண்டு, ஒன்பது அடி உயர சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது. நேற்று, ஓம் பாலராஜேஸ்வரி ஞானபீடம் சார்பில், காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டது. ஏகாம்பரநாதர் கோவில் முன், பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது. இச்சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய, இடம் பார்த்து வருவதாகவும், விரைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும், ஸ்ரீராமகிருஷ்ண யோக பீடம் நிர்வாகி யோககுமார் தெரிவித்தார்.