காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா முன்னிட்டு தெருவடைச்சான் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 9ம் தேதி பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை முடிந்து ரிஷப கொடி ஏற்றப்பட்டது.பின் நவசந்தியாக பூஜை தீபாரதனை நடந்தது.இரவு பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் முடிந்து விநாயகர் முஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலும்,கயிலாசநாதர் சூரிய பிரபை,சுந்தராம்பாள் சந்திரபிரபை வாகனத்திலும், சண்டிகேஸ்வர் ரிஷபவாகனத்திலம் வீதி உலா நடந்தது.நேற்று முன்தினம் இரவு தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.வரும் 17ம் தேதி தேர் திருவிழா,வரும் 20ம் தெப்ப திருவிழா நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலக்குழுவினர் தலைவர் கேசவன்,துணைத்தலைவர் ஆறுமுகம்,செயலாளர் பக்கிரிசாமி,பொருளாளர் ரஞ்சன் மற்றும் அமுதா ஆறுமுகம்,சிவகணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.