Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சப்த கன்னிமார் கோவில் கும்பாபிஷேக ... கைலாசநாதர் கோவிலில் தெருவடைச்சான் வீதி உலா கைலாசநாதர் கோவிலில் தெருவடைச்சான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேம்பரளி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
வேம்பரளி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

15 மார்
2022
02:03

நத்தம்: நத்தம் அருகே வேம்பரளி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி கோயில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த மார்ச் 12ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக பூஜை தொடங்கியது. நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம் ,லட்சுமி ஹோமம், அஸ்திர ஹோமம், கோ பூஜை நடந்தது. 13ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் கால பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று நான்காம் கால யாக பூஜை, யாக வேள்வி மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது‌. முன்னதாக காசி, ராமேஸ்வரம், கங்கை, அழகர்கோவில், காவிரி போன்ற புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் நிரம்பிய குடங்கள் ஊர்வலமாக மேள தாளம் முழங்க கோவிலைச் சுற்றி வந்தது. பின்னர் கோயிலின் உச்சியில் உள்ள கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கருடன் வானத்தில் வட்டமிட்டார், அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவை இட்டனர். கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் மற்றும் பூஜை மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின் அறுசுவை உணவு அன்னதானம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்திலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட எல்லா விசேஷ நாட்களிலும் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar