Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் ... ஸ்ரீரங்கம் பிரம்மோத்ஸவ விழா: தங்கபல்லக்கில் நம்பெருமாள் புறப்பாடு ஸ்ரீரங்கம் பிரம்மோத்ஸவ விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தியநாத சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைத்தியநாத சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 மார்
2022
08:03

மயிலாடுதுறை: சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு தையல் நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு  திருதேரோட்டம் துவங்கியது. அடுத்தடுத்து நான்கு தேர்களை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அருள்மிகு தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இக்கோவில் முருகப்பெருமான் செல்வமுத்துக்குமாரசாமியாக தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சித்தமருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி தனிச் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார். இக்கோவிலில் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி கோவிலில் வழங்கப்படும் திருச்சாந்துருண்டை என்னும் பிரசாதத்தை உண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.இவ்வளவு சிறப்பு மிக்க கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 7 ஆம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் விழா தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. விநாயகர்,செல்வ முத்துக்குமார சுவாமி, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட நான்கு தேர்தல் அடுத்தடுத்து நிலையில் இருந்து புறப்பட்டு வீதியுலா சென்றது. திருத்தேரோட்ட விழாவை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் வடம் படித்து துவக்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 4 தேர் வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar