காஞ்சிபுரம்:காஞ்சி சங்கர மடத்தின், 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நான்காம் ஆண்டு வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் மடத்தில் நடந்தது.
சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தர் சேதுராமன் குடும்பத்தினர் அதிஷ்டானத்தில் பொருத்துவதற்காக தங்க கவசத்தை வழங்கினர். கவசத்தில், மன்னார்குடி ராஜகோபால் சுவாமி, குருவாயூரப்பன், துவாரக கிருஷ்ணன், பாண்டவ துாதப்பெருமாள் ஆகிய சுவாமிகளின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில், கவசத்தை பதித்து, தீபாராதனை செய்தார்.இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, மடத்தில் மூன்று நாட்களாக வேதபாராயணம், பக்தி இன்னிசை மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன.