சித்தூர் : பள்ளிக்கொன்டேஸ்வர சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜைகள் வெகுவிமரிசையாக நடத்தப் பட்டது. சர்வ மங்கள சமேத ஸ்ரீ பள்ளிக்கொன்டேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் வீற்றிருக்கும் சுயம்புவான வால்மீகேஸ்வர சுவாமிக்கும் நந்தீஸ்வரருக்கும் ஒரே சமயத்தில் பல்வேறு சுகந்த திரவியங்களாலும் பஞ்சாமிர்தத்தாலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பிரதோஷ காலத்தில் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கோயிலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.இதில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முனி சேகர் ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.