சென்னை: சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்து வருகிறது.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திர விழா நேற்று (15ம் தேதி) துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் முருகப்பெருமானுக்கு இன்றும் (16ம் தேதி) நாளையும் (17ம் தேதி) லட்சார்ச்சனை சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருளை பெறலாம். கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.