பதிவு செய்த நாள்
18
ஜூலை
2012
11:07
திருவேங்கடம்:கிழக்கு அழகு நாச்சியார்புரம் அக்னி காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது.சங்கரன்கோவில் தாலுகா கிழக்கு அழகுநாச்சியார்புரம் அக்னி காளியம்மன், பைரவர், வீரபுத்திரர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் காலை யஜமானர், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரஹ ஹோமங்கள், தனபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாள் காலை முதல் இரவு விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கிடஸ்தாபனம், முதல்கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.3வது நூள் காலை தயானந்த சுவாமிகள், சுவாமி அகிலானந்தா அருளாசியுடன் சுவாமி ராகவானந்தா முன்னிலையில் விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, கடம்புறப்பாடு ஆகியன நடந்தன. தொடர்ந்து அக்னி காளியம்மன், பைரவர், வீரபுத்திரர், பரிவார தேவதைகள், விமானத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அர்ச்சனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை சங்கரன்கோவில் சர்வ சாதகம் கிருஷ்ணபட்டர் நடத்தினார்.ஏற்பாடுகளை கிழக்கு அழகுநாச்சியார்புரம் விழாக்குழுவினர், திருப்பணிக்குழவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.