பதிவு செய்த நாள்
18
ஜூலை
2012
11:07
புதுச்சேரி: இ.சி.ஆர்., சாலை கொட்டுப்பாளையம் சந்திப்பில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் ஆடி அமாவாசை கடல் தீர்த்தவாரி விழா, 23ம் ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா நடக்கிறது.இதையொட்டி நாளை 19ம் தேதி காலை 6 மணிக்கு விநாயகர், முருகர், அம்மன் சுவாமிகள் நாகாத்தம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் முடிந்து, தீர்த்தவாரி நடக்கிறது.பின், வரும் 19ம் தேதி ஆடிப்பூரத் திருவிழா நடக்கிறது. காலை 6 மணிக்கு கலசம் வைத்து வழிபாடு துவங்குகிறது. காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலமும், 11 மணிக்கு பால் அபிஷேகம், கலச அபிஷேகமும், இரவு 7 மணிக்கு விநாயகர், முருகன், நாகாத்தம்மன் வீதியுலா நடக்கிறது.