பதிவு செய்த நாள்
21
மார்
2022
10:03
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா, கடந்த 16 ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தோடங்கியது. 20 ந் தேதி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, மாலை மஞ்சள் நீர் கிணறு நிரப்புதல் இரவு 10 மணிக்கு வெள்ளை யானையில் அம்மன் புறப்படுதல், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெற்றது. நாளை 22 ந் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல, நிகழ்ச்சியும், நடக்கிறது.
வசதிகள் : கோவிலுக்கு திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், கோபி மற்றும் பெருமாநல்லூரை சுற்றி உள்ள கிராம பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்க தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. தீ யணைப்பு துறை, மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி :30 இடங்களில் மொபைல் டாய்லெட், 7 இடங்களில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக கானப்படுவதால், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை அனைத்து பக்தர்களும் கானும் வகையில் இரண்டு இடங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு :அவிநாசி டி.எஸ்.பி. தலைமையில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. போலீசார், ஆயிதபடை, ஊர்காவல்படையினர், என 800 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மூன்று இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
பஸ் வசதி : கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், நம்பியூர், கோபி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.