மேலுார்: மேலுார் அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.அவர் பேசுகையில், மேலுார் பகுதி மக்களிடையே தேசிய பற்று அதிகம் உள்ளதால் பா.ஜ., பக்கம் வருவார்கள் என்பதில் மாற்று கருத்து கிடையாது. 1765 ல் வரிகேட்ட வெள்ளைகார கேப்டனுக்கு வரி கொடுக்காமல் தன்னாட்சி நடத்தும் நாடு வெள்ளலுார் நாடு என்றார்.மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன், மாநில செயலாளர் (கல்விபிரிவு) கந்தசாமி, மாவட்ட செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.