அரோகரா... கோஷத்துடன் ஆடி அசைந்து வந்த குன்றத்து தேர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2022 08:03
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று (மார்ச் 22) நடந்தது. நான்கு மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மலையைச் சுற்றி தேர் வலம் வந்தது. இன்று தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.
காலை 6:20 மணிக்கு விநாயகர் எழுந்தருளிய சட்டத்தேர் முன்செல்ல, பெரிய வைரத்தேர் 4 மணி நேரம் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வலம் வந்து காலை 10:20 மணிக்கு நிலைநிறுத்தப்பட்டது. பின்பு கோயில் நடை திறந்து சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவு தங்க மயில் வாகனத்தில் வீதிஉலா நிகழ்ச்சியில் சுவாமி, தெய்வானை அருள்பாலித்தனர். விபத்து தவிர்ப்பு: தேரோட்டம் நிறைவடையும் நிலையில் கோயிலை தாண்டி நிறுத்துவதற்காக சென்ற சட்டத் தேரின் மேல்பகுதி மின் ஒயர்களில் உரசியதில் மின்கம்பம் சாய்ந்தது. தேரோட்டத்திற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததாலும், மின் கம்பம் முழுமையாக தரையில் விழாமல் தொங்கியதாலும் யாருக்கும் பாதிப்பில்லை.