அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2022 09:03
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பிரசித்திபெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் வழிபாடு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவுள்ளதையொட்டி தெலுங்கானா ஆளுனர் தமிழிசைசவுந்தர்ராஜன் கோயிலுக்கு வருகைதந்தார். அவருக்கு தருமை ஆதீனம் சார்பில் மாணிக்கவாசக தம்பிரான் முன்னிலையில் கணேசகுருக்கள் பூர்ணகும்பமரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து தமிழிசை சவுந்தரராஜன் ஆசிபெற்றார் தொடர்ந்து குருமகா சன்னிதானத்துடன், அமிர்தகடேஸ்வரர் காலசம்ஹாரமூர்த்தி அபிராமி அம்மன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு கோபுர கலசங்களுக்கு நவதானியங்கள் இட்டு வழிபாடு நடத்தினார் . பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஆதீனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது கும்பாபிஷேகம் நடைபெறும் தேதி அன்று ஹைதராபாத் புதுச்சேரிக்கு விமான சேவை தொடங்கும் நிகழ்ச்சி இருப்பதால் என்னால் கலந்துகொள்ள இயலாது என்பதால் இன்று முதல் கால யாகசாலை பூஜை தொடங்கும் தினத்தில் கோவிலுக்கு வந்து வழிபாடு மேற்கொண்டேன். கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள்கரோனாவிதிமுறைகளை கடைபிடித்து விழாவை கண்டுகளிக்க வேண்டும். மயிலாடுதுறை தரங்கம்பாடி வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்குவதற்கு ரயில்வே துறை அமைச்சரிடம் இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன் என்றார். இதில் புதுச்சேரி போக்குவரத்துதுறை அமைச்சர் சந்திர பிரியங்கா, பாஜ மாநிலபொருளாளர் சேகர், மாநில செயலாளர் தங்க வரதராஜன் மாவட்ட தலைவர் வெங்கடேசன் மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன் , ஒபிசி பிரிவு மாநிலபொறுப்பாளர் அகோரம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.