கோயிலை மறைத்து நடத்தப்படும் வாரச்சந்தை: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2022 02:03
மானாமதுரை: மானாமதுரையில் வாரச்சந்தை கட்டுமான பணி நடைபெற்று வருவதால் ஆனந்தவல்லி அம்மன் கோயில் பகுதியில் கோயிலை மறைத்து வாரச்சந்தை நடத்தப்பட்டு வருவதால் பக்தர்கள் மன வேதனைக்குள்ளாக்கி வருகின்றனர்.
மானாமதுரையில் வாரச்சந்தை கட்டுமானப்பணி ரூ.2.50 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் கடந்த ஒரு வருட காலமாக வைகை ஆற்றுக் குள்ளும்,ஆனந்தவல்லி அம்மன் கோயில் பகுதியை ஒட்டியும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 7ம் தேதி ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவங்க உள்ளதையடுத்து மானாமதுரை நகராட்சி சார்பில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வாரம் வைகை ஆற்றுக்குள் வாரச்சந்தையை நடத்தவிடாமல் தடை விதித்ததையடுத்து வாரச்சந்தை வளாக பகுதியை ஒட்டியுள்ள ரோடுகளில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று ஆனந்தவல்லி அம்மன் கோயில் பகுதிகளிலும் வியாபாரிகள் கடைகளை போட அனுமதிக்க கூடாது என கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வியாபாரிகள் சிலர் கோயிலை மறைத்து கடைகளை வைத்திருந்தனர்.சித்திரைத் திருவிழா நடைபெறும் சமயத்தில் கோயிலை ஒட்டி வியாபாரிகள் கடைகளை போடுவதால் திருவிழா சமயத்தில் மிகுந்த நெருக்கடி ஏற்படும் என பக்தர்கள் தெரிவித்தனர்.ஆகவே நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் வரும் வாரங்களில் கோயில் முன்பாக வாரச்சந்தை கடைகளை அமைக்க அனுமதிக்க கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.