அன்னூர்: சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் எருது விரட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
குன்னத்தூராம்பாளையம், சக்தி மாரியம்மன் கோவிலில், பூச்சாட்டு திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. 15ம் தேதி கம்பம் நடப்பட்டது. 23ம் தேதி காலையில் அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாவிளக்கு எடுத்தல், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், முளைப்பாலிகை எடுத்தல் நடந்தது. நேற்று சிவன், பார்வதி, அம்மன் மற்றும் அகோரிகள் உருவம் தாங்கி பக்தர்கள், வீடு வீடாகச் சென்று, எருது விரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களை அழைத்தனர். மேலும் திருவிழாவிற்கு நன்கொடை வசூலித்து கோவில் உண்டியலில் சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை எருது விரட்டும் நிகழ்ச்சி குன்னத்தூராம்பாளையத்தில் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அம்மன் திருவீதி உலா காலையில் நடைபெறுகிறது. இரவு மறுபூஜை உடன் திருவிழா நிறைவு பெறுகிறது.