ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.46.13 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2022 11:03
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, தேக்கம்பட்டி உதவி ஆணையர் ஹர்சினி, ஆய்வர் செல்வி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன் ஆகியோர் தலைமையில் காணிக்கை எண்ணப்பட்டது.மொத்தம், 46 லட்சத்து, 13 ஆயிரத்து, 752 ரூபாய் காணிக்கை வசூலானது. 206 கிராம் தங்கம் மற்றும் 216 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.