திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து கொடியேற்றப்பட்டது. மாலையில் பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏப். 8ல் பால்குடம், பொங்கல் வைத்தல், பூச்சட்டி எடுத்தல், அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும். ஏப். 9ல் முளைப்பாரி கரைத்தல், ஏப். 10ல் அன்னதானம் நடைபெறும்.