பதிவு செய்த நாள்
04
ஏப்
2022
08:04
மேட்டுப்பாளையம்: தென் திருமலை வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில், தெலுங்கு வருட பிறப்பு யுகாதி விழா முன்னிட்டு, தங்கத் தேரோட்டம் நடந்தது.
மேட்டுப்பாளையம் அருகே தென்திருமலையில், வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுப்ரபாதம் நிகழ்ச்சியுடன் யுகாதி விழா துவங்கியது. விஸ்வரூப தரிசனம், சகஸ்ரநாம அர்ச்சனை, யுகாதி ஆஸ்தானம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் தங்கத் தேரோட்டம் நடந்தது. இதில் வண்ண மலர்கள் அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தங்க தேரில் எழுந்தருளினார். நாதஸ்வர இசை, மேளதாளங்கள் முழங்க, நான்கு மாட வீதிகள் வழியாக பக்தர்கள் வடம் பிடித்து, தங்கத்தேரை இழுத்து வந்தனர். தேர் நிலையை அடைந்தவுடன், இரவு,7:30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் விழா நிறைவடைந்தது. இவ்விழாவில் கே.ஜி., குரூப் நிறுவனங்களின் தலைவர் பாலகிருஷ்ணன், கே.ஜி., டெனிம் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம், கண்ணபிரான் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ஹரி மற்றும் மில், தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்தினர், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.