காரைக்கால்: திருப்பட்டினம் வீழிவரதராஜப்பெருமாள் கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு விஷேச ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் திருபட்டினம் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீவீழி வரதராஜப்பெருமாள் கோவிலில் முக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.நேற்று முன்தினம் தெலுங்கு வருடபிறப்பு(யுகாதி பண்டிகையை) முன்னிட்டு பெருமாளுக்கு பல்வேறு திறவங்களாக சிறப்பு அபிேஷகம் ஆராதனை நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் மக்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஸ்ரீவீழி வரதராஜப்பெருமாள் ஸ்ரீசெங்கமலத்தாயார் பிரகார புறப்பாடு மற்றும் ஸ்ரீ பெருமாள்,ஸ்ரீதாயார் சேர்த்தி விஷேச ஊஞ்சல் சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கோவில் அறங்காவலர்கள் முக்கிய பிரமுகர்கள் பாலகுரு உள்ளிட்ட ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.