திட்டக்குடி: தொழுதூர் அடுத்த வ.சித்தூர் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தொழுதூர் அடுத்த வ.சித்தூர் அருள்மிகு பச்சையம்மன், மண்ணாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கோ பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை விநாயகர் பூஜை, வேதிகாசாலை பாராயணம், யந்ர ஸ்தாபனம் செய்யப்பட்டு மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு நடந்தது. யாகசாலையிலிருந்து புனிதநீர் எடுத்துச்செல்லப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.