கன்னிவாடி: மாங்கரைஅருகேநடுப்பட்டி கங்கையம்மன், கருப்பணசாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், மலர்அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மழைவேண்டி பிரார்த்தனை, விசேஷ பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத் தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.