அலங்காநல்லுரர்: மதுரை கோவில்பாப்பாகுடி ஊராட்சி சிக்கந்தர் சாவடி கிராம மந்தையம்மன், காளியம்மன், பத்ரகாளியம்மன், முனியாண்டி கோயில் உற்சவ விழா 17 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. இத்திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 3 நாட்கள் நடக்கும். காவல் தெய்வங்கள் துணையுடன் இந்துக்கள், இஸ்லாமிய கொடி கம்பங்களை ஊர்வலமாக எடுத்துசென்று சிக்கந்தர் ஊருணியில் ஏற்றினர். இஸ்லாமியர்களுக்கு மரியாதை செய்த பின் சக்தி கரகம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் தீச்சட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, பொங்கல் வைத்து வழிபட்டனர். திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் ஊர்வலமாக சென்று முளைப்பாரியை சிக்கந்தர் ஊருணியில் கரைத்தனர். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்தனர்.