பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளில் சுவாமி பிரியாவிடையுடன் குண்டோதரன் வாகனத்திலும், விசாலாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் அருள்பாலித்தார். ஏப்., 14 அன்று காலை திருக்கல்யாணமும், மறுநாள் சித்திரைத் தேரோட்டம் நடக்கிறது.