போடி பரமசிவன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2022 02:04
போடி: தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்று விழா அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜய பாண்டியன் தலைமையில் நடந்தது. தக்கார் சுரேஷ், நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, முன்னாள் துணைத்தலைவர் சங்கர், அன்னதான அறக்கட்டளை செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர்கள் முத்துராஜ், மகேந்திரன், வர்த்தகர்கள் சங்க தலைவர் வேல்முருகன், அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, காலை 7.30 மணியளவில் போடி பெரியாண்டவர் கோயிலில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு செல்லப்பட்டு காலை 10.30 மணி அளவில் பரமசிவன் கோயிலில் கொடியேற்றப்பட்டது சிவனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தன. சுவாமி அலங்காரம் சிறப்பு பூஜைகளை அர்ச்சகர்கள் சுந்தரம் , பரமசிவம் செய்தனர். சித்திரை திருவிழா ஏப்ரல் 15ல் துவங்கி 22 வரை நடக்கிறது.