விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கர்நாடகாவில் யாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2022 03:04
மதுரை :காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திராவில் யாத்திரை முடிந்து கர்நாடகாவில் யாத்திரையை துவங்கி உள்ளார்.
காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் யாத்திரையாக காஞ்சிபுரத்தில் இருந்து மார்ச் 16 புறப்பட்டார். ஆந்திராவில் பல்வேறு நகரங்களில் தங்கி சந்த்ர மவுலீஸ்வர பூஜை, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின்னர் கர்நாடக மாநிலம் பெல்லாரிக்கு புறப்பட்டார். பெல்லாரியில் லட்சுமி நாராயண சுவாமி கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கே.ஆர்.எஸ். மகாலில் புரோகிதர் சங்கம் சார்பில் பாத பூஜை நடந்தது. அங்கு ஹிந்து தர்மம் மற்றும் கலாசாரம் குறித்தும், மடத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கன்னடத்தில் பேசினார். பின்னர் சந்துாரு நகருக்கு சென்ற அவருக்கு கோர்படே அரச குடும்பம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. மார்ச் 30 வரை சந்துாருவில் தங்கியிருக்கும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறுநாள் ெஹாசபேட் செல்கிறார். மார்., 31 முதல் ஏப் 12 ம் தேதி வரை ெஹாசபேட் இருக்கும் சுவாமிகள் மார்., 12ம் தேதி கனகவதி சென்று அங்கு சந்திரமெளலீஸ்வரர் பூஜை செய்கிறார். பின் ஏப்., 14 முதல் ஏப்.,17 வரை ராய்ச்சூரிலும், ஏப்., 18, 19ம் தேதி தெலுங்கானா மகபூப்நகரில் தங்கியிருக்கும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏப் 20 தேதி ஹைதராபாத் செல்கிறார். அங்கு நடைபெறும் சந்திரமெளலீஸ்வரர் பூஜையில் கலந்து கொள்கிறார்.