கம்பிளியம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2022 03:04
சாணார்பட்டி சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இத்திருவிழாவை முன்னிட்டு மார்ச் 25 அம்மன் சாமி சாட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தோரணம் கட்டுதல், பூஞ்சோலையில் கரகம் பாலித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று (ஏப்ரல் 9 ) அதிகாலை வானவேடிக்கை மற்றும் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் அம்மன் ஆலயம் அழைத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி, பால்குடம், ரதம் இழுத்தல் மற்றும் பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். பின் பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்டவை நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இத்திருவிழாவை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான நாளை ஏப்ரல் 11 பாரி வேட்டை ஆடுதல், மஞ்சள் நீராட்டம் மற்றும் அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.