பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கும்ப திருமஞ்சனம் நடந்தது.
பரமக்குடி சவுராஷ்ட்ர பிராமண மகா ஜனங்களுக்கு பாத்தியமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 11 காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கும்பங்கள் புறப்பாடாகி, சுந்தரராஜ பெருமாள் மற்றும் கருப்பண சுவாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து நேற்று நள்ளிரவு 2:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.