எந்த வேலையைத் தொட்டாலும் இழுத்துக் கொண்டே போகுதே தவிர முடிய மாட்டேங்குதே! என்று சிலர் அங்கலாய்ப்பர். இந்நிலை மாற உங்கள் இஷ்டதெய்வத்திற்கு கனிமாலை சாத்துங்கள். குறிப்பாக, மாரி, காளி, நரசிம்மர், பைரவர் போன்ற உக்ர மூர்த்திகளுக்கு எலுமிச்சை மாலை சாத்துவது வழக்கம். எலுமிச்சம்பழத்தை தெய்வக்கனி என்று சொல்வதுண்டு. இம்மாலையைத் தயாரிக்கும்போது காயாகவோ அல்லது மிகவும் பழுத்ததாகவோ இல்லாமல் அளவிலும், நிறத்திலும் ஒரே மாதிரியான 108 பழங்களைக் கோர்க்க வேண்டியது அவசியம். உக்ர தெய்வங்களுக்கு மாலையிடும்போது, பானகம், நீர்மோர், தயிர் சாதம் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். இதுதவிர, உங்களுக்கு பிடித்த அம்மனுக்கு பொங்கலிட்டு கனிமாலை சாத்தினாலும், இழுத்தடிக்கும் விஷயங்கள் விரைவில் கனிந்து நிறைவேறும் என்பது ஐதீகம்.