பதிவு செய்த நாள்
20
ஏப்
2022
08:04
உளுந்துார்பேட்டை : கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில், திருநங்கையர் தாலி கட்டி, சுவாமியை வழிபட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா, கடந்த 5ம் தேதி சாகை வார்த்தலுடன் துவங்கியது. 6ம் தேதி மாலை 4:00 மணிக்கு, பந்தலடியில் தாலி கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று திருநங்கையர் மற்றும் பக்தர்கள், பூசாரி கைகளால் தாலி கட்டி, சுவாமியை வழிபட்டனர். இரவு சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று 20ம் தேதி காலை, 6:30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.தாலி கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கையர் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.கள்ளக்குறிச்சி எஸ்.பி., செல்வகுமார் தலைமையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை என ஐந்து மாவட்டங்களில் இருந்து, 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.