பதிவு செய்த நாள்
21
ஏப்
2022
08:04
பல்லாவரம் : பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை பெருவிழாவில் ரங்கநாத பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், 12 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழா, சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு, நான்கு கோலங்களில், பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில், இக்கோவிலில் தேர் திருவிழா நடைபெறும். மலைக்கோவிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப் பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்சவம் நடக்கும். சித்திரை விழாவில், நீர்வண்ணர் - -அணிமாமலர் மங்கை திருக்கல்யாணமும், பங்குனி திருவிழாவில் ரங்கநாதர்- - ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்கும். இதைத் தவிர நரசிம்மருக்கு ஆணியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும், ஒரு நாள் விழா நடக்கும். அந்த வகையில், சித்திரை திருவிழாவில், கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 8ம் நாளான ஏப்., 22ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.