பதிவு செய்த நாள்
22
ஏப்
2022
03:04
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் சொல்ல, கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில், சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று காலை 9:45 மணியளவில், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் முன்னிலையில், , புனிதநீர் தெளித்து, மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அணிவித்த முகூர்த்தக்கால் நடப்பட்டது. கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. நிகழ்ச்சியில், கோவில் அர்ச்சகர்கள் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.