ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள உத்திரகோசமங்கையில் மங்களநாதசுவாமி என்னும் பெயரில் சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள நடராஜர் மரகதத்தால் ஆனவர். ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பில் இருக்கும் இவரை, மார்கழி திருவாதிரையன்று மட்டும் மரகத நடராஜராக தரிசிக்கலாம். ‘உத்திரம்’ என்பது ‘உபதேசம்’ என்றும், ‘கோசம்’ என்ப்து ‘ரகசியம்’ என்றும் பொருள்படும். பார்வதிக்கு பிரணவ மந்திரத்தை ரகசியமாக உபதேசம் செய்ததால், இத்தலம் உத்திரகோசமங்கை எனப் பெயர் பெற்றது