பாலமேடு: பாலமேடு அருகே சத்திர வெள்ளாளப்பட்டியில் காளியம்மன் கோயில் சித்திரை பெருவிழா மற்றும் குளுமை சாட்டுதல் உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது.அம்மன் கரகம் அலங்கரித்து கிரிஜோதி ஏற்றினர். பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு கிடா வெட்டுதல், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. பெண்கள் ஊர்வலமாக சென்று முளைப்பாரியை கரைத்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்தனர்.