பதிவு செய்த நாள்
25
ஏப்
2022
09:04
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் 1,005ம் ஆண்டு அவதார உற்சவ விழா நாளை துவங்குகிறது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில், அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர்.
இவரின் அவதாரத் தலமான ஸ்ரீபெரும்புதுார், ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், தானுகந்த திருமேனியாக, ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இங்கு, ஆண்டு தோறும் சித்திரை மாத திருவாதிரை நட்சத்திரை முன்னிட்டு, 10 நாட்கள் ராமானுஜரின் அவதார உற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, ராமானுஜரின், 1,005ம் ஆண்டு அவதார உற்சவ விழா, நாளை துவங்குகிறது.இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீபெரும்புதுாருக்கு வருகை புரிவர். இதையடுத்து, பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.