பதிவு செய்த நாள்
25
ஏப்
2022
10:04
உடுமலை: டி.வி., பட்டணம், சாய் மந்திரில், புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினத்தையொட்டி, சிறப்பு ஆராதனைகள் நடந்தது.ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி சார்பில், உடுமலை டி.வி., பட்டணம் சாய்மந்திரில், புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினத்தையொட்டி, சிறப்பு ஆராதனைகள் நேற்று காலை துவங்கியது.ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனத்துக்குப்பின் காலை, 7:15 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது.மாலை, 4:15 மணிக்கு, வேதம், சாய்பஜன், பஞ்சரத்ன கீர்த்தனைகள் மற்றும் பகவானின் லீலைகள் குறித்த சிறப்புரை நடந்தது.தொடர்ந்து, மங்கள ஆரத்தி உள்ளிட்ட ஆராதனைகள் நடைபெற்றது, பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி சார்பில், மடத்துார் கிராமத்தில், நாராயண சேவையும், சாய் மந்திரில், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.