தேன்கனிக்கோட்டை அபய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2022 12:04
கிருஷ்ணகிரி : தேன்கனிக்கோட்டை அடுத்த கலகோபசந்திரம் பஸ் ஸ்டாப் அருகே, அபய ஆஞ்சநேயர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இங்கு, 13 அடி உயரத்தில், ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அதிகாலை, 5:00 மணி முதல், கணபதி ஹோமம், ராமா ஆஞ்சநேயர் ஹோமம், நவக்கிரக ஹோமம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:30 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை, பெனசப்பள்ளியை சேர்ந்த நாகராஜ் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.