வெள்ளலுாரில் மாரியம்மனுக்கு திருக்கல்யாணம்; பக்தர்கள் மொய்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2022 03:04
கோவை, : கொங்கு தேவேந்திர குல வேளாளர் சமூக மாரியம்மன் கோவில் திருவிழாவின், முக்கிய நிகழ்வான அம்மன் ஆற்றில் நீராடும் வைபவமும், அக்னிச்சட்டி பூவோடு எடுக்கும் வைபவமும் விமரிசையாக நடைபெற்றது.வெள்ளலுாரில் கொங்கு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் மாரியம்மன் கோவில் உள்ளது.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், விமரிசையாக ஆண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று முன்தினம், அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனுக்கு திருமண மொய்ப்பணம் சமர்ப்பித்தனர்.நேற்று அம்மன் ஆற்றில் நீராடி வருதலும், அக்னிச்சட்டி பூவோடு மற்றும் மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்வும் நடைபெற்றது. இன்று அம்மன் திருவீதி உலாவும், இரவு தாலாட்டு உற்சவமும் நடைபெறுகின்றன. நாளை மாலை 4:00 மணிக்கு, மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுதினம் மறுபூஜையும், விழாக்கொடி மற்றும் நந்தா தீபம் இறக்கும் வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.